என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்
நீங்கள் தேடியது "பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்"
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் விமர்சனம். #BhaskarOruRascal #ArvindSwami
வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், மாஸ்டர் ராகவ், எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகனாக இருக்கிறார்.
இந்த நிலையில், பள்ளி விடுமுறையின் போது கராத்தே வகுப்புகளுக்கு செல்கிறார் ராகவ். அந்த வகுப்புகளுக்கு அவரது நெருங்கிய தோழியான பேபி நைனிகாவும் வருகிறார். நைனிகாவின் அம்மா அமலாபால். கணவனை இழந்த அமலாபால் எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பயந்து செய்யக்கூடியவர்.
தனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும் எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை அப்பாவாக அழைக்க ஆரம்பிக்கிறாள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அமலாபாலை ராகவ்வுக்கு பிடிக்கிறது. அவரை அம்மா என்றே அழைக்கிறான்.
இந்த நிலையில், மாஸ்டர் ராகவ்வும், நைனிகாவும் சேர்ந்து, அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகின்றனர். பின்னர் அரவிந்த்சாமி போனில் இருந்து அமலாபாலுக்கும், அமலாபால் போனில் இருந்து அரவிந்த்சாமிக்கும் அவர்களே மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகின்றனர்.
மெசேஜை பார்த்து குழப்பமடையும் அரவிந்த்சாமி, அமலாபால் இடையே காதல் வருகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடி தூள் கிளப்பும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க, தனது மகனிடம், அவன் சொல்வதைக் கேட்கும் வெகுளியான கதபாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார். அமலாபாலை விட அரவிந்த்சாமிக்கும், மாஸ்டர் ராகவ்வுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சொல்லலாம்.
அமலாபால், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். எதையும் பயந்து செய்யும் சுபாவத்திலும், பாடலில் கவர்ச்சியாகவும் வந்து கவர்கிறார். மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இருவரின் கதபாத்திரமும் ரசிக்க வைப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
நாசர், விஜயக்குமார் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூரி, ரோபோ சங்கர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
அப்பா மகன், அம்மா மகள் இந்த நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வழக்கமான கதையில் அடிதடியுடன், கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கியிருக்கிறார் சித்திக். காமெடி, ஆக்ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.
அம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சிரிக்க வைக்கிறான். #BhaskarOruRascal #ArvindSwami #AmalaPaul
Bhaskar oru Rascal Review Siddhique Aravind swamy Bhaskar oru Rascal Mammootty Nayanthara Amala paul Nasser Soori Robo Shankar Ramesh Khanna Siddique Master Raghav Baby Nineka nikisha patel சித்திக் அரவிந்த்சாமி பாஸ்கர் ஒரு ராஸ்கல் மம்மூட்டி நயன்தாரா அமலாபால் நாசர் சூரி ரோபோ சங்கர் ரமேஷ் கண்ணா சித்திக் மாஸ்டர் ராகவ் பேபி நைனிகா நிகிஷா பட்டேல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X